சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி பிரகாஷ். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கடந்த 10ஆம் தேதி இளம்பிள்ளையைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் சேலம் தமிழ்ச் சங்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ராஜகோபாலை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ஒரு சவரன் தங்க நகையை பிரகாஷ் பறித்துச் சென்றுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பிரகாஷைப் பிடிக்க முயன்றபோது பொது மக்களுக்கும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜகோபால் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.