சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்றும் முயற்சியில் தொண்டு நிறுவங்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து ’குழந்தை நேய சேலம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்ற முயற்சி! - Child Friendly Salem election manifesto
சேலம்: சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்றும் முயற்சியாக குழந்தை நேய சேலம் தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தை கல்வி, பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

இவர்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான சூழ்நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி குழந்தை நேய சேலத்தை உருவாக்குவதை குறிக்கோளாக வைத்துள்ளனர். இந்த நிலையில் குழந்தை நேய சேலத்தின் அறிக்கை நேற்று (மார்ச் 24) வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி நுண் உயிரியல் துறை மருத்துவர் திருநாவுக்கரசு பேசுகையில், "குழந்தைகள் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் களப்பணி மேற்கொண்டு அதன் அடிப்படையில் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.