இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில், அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன. அதனடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதாக தெரிவித்திருந்தார்.
பரப்புரைத் தொடக்கம்
அதன்படி, இன்று சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு பரப்புரையைத் தொடங்கினார். முன்னதாக சென்றாயப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.