சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டருகே காசகாரனுர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு கடந்த இரண்டு நாள்களாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள், முதியவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.