சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் பார்த்திபன் (22). இவர், நேற்று மாலை கன்னங்குறிச்சிக்கு வந்தார். பின்னர் அவர் தன்னை தூய்மை இந்தியா திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வாங்கித்தரும் அலுவலர் எனக் கூறியுள்ளார்.
இதன் பிறகு, கன்னங்குறித்து பொதுமக்கள் சிலரை அணுகி நலத்திட்டங்கள் வேண்டுமா ? எனக் கேட்டுள்ளார்.
இதில், சிலருக்குப் பார்த்திபன் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, பார்த்திபனை கன்னங்குறித்து பேரூராட்சி அலுவலகத்துக்குப் பொதுமக்கள் அழைத்துச் சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஆறுமுகநயினார் இருந்தார்.
அவர் பார்த்திபனிடம் விசாரித்தபோது, பார்த்திபன் தூய்மை இந்தியா திட்டத்தில் நல உதவிகள் பெற்றுத் தர வந்துள்ளதாகவும், பொதுமக்களைச் சந்தித்து யார் யாருக்கு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தரலாம் என விவாதிக்க வந்திருப்பதாகவும் தனக்கு லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தருமாறும் செயல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.