சேலம்: மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிட்கோ உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலைகளும், அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சுத்தம் செய்த பிறகு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
ஆனால் அதற்கு அதிக செலவு ஏற்படுவதால் தொழிற்சாலை உரிமையாளர்கள் ரசாயன கழிவுநீரை சுத்தம் செய்யாமல் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக கழிவுநீர் நேரடியாக 16 கண் உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக வெளியேற்றப்படுவதால் ரசாயன கழிவுநீர் கால்வாயில் கலந்து ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது தொடர்கதையாக உள்ளது.