அம்பேத்கரின் 64ஆவது நினைவு நாளையொட்டி, சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மத்திய உருக்குத் துறை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய பக்தன் சிங் குலாஸ்தே, “புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில், சேலத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்ததை வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். சேலத்தில் உள்ள இரும்பாலையை தனியார்மயமாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆனால் அது குறித்து இப்போது கருத்து கூற முடியாது. ஆனால் இரும்பாலை தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் நடக்கவிட மாட்டோம். அதனால் இரும்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம்.