சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை, பாதுகாப்பான மற்றும் மாசற்ற வகையில் கொண்டாடிட வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகரப்பகுதிகளில் வசிக்கக் கூடிய பொதுமக்கள், தாங்கள் வாங்கும் இனிப்புப் பெட்டிகளின் காகித அட்டைகள், பட்டாசுகளை சுற்றியுள்ள பிளாஸ்டிக் உறைகள், பட்டாசு கழிவுகள் போன்றவற்றை தெருவில் எரியாமலும், சாக்கடை கால்வாய்களில் வீசாமலும், தாமாக முன்வந்து தினந்தோறும் வீடு வீடாக திடக்கழிவுகள் சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடமும் அல்லது சாலையோரங்களில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்ட வேண்டும்.