சேலம் மாவட்டம் மாநகர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் சக்திவேல். இவர், மாசிநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஞாயிறு (ஜூன் 28, 2020) அன்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
தெருநாய்களால் விபத்தில் சிக்கிய எஸ்ஐ உயிரிழப்பு - நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி - அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் விபத்து மரணம்
12:20 July 06
சேலம்: சாலையில் நாய்களின் தொல்லையால், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது கன்னங்குறிச்சி பிரதான சாலையில், விபத்துக்குள்ளாகி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சக்திவேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
இதில், சக்திவேல் இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையின் நடுவே ஏராளமான தெரு நாய்கள் படுத்திருந்ததும், அதைக் கவனிக்காமல் நாய்கள் மீது வாகனத்தை ஏற்றியதால், அவர் விபத்துக்குள்ளானார் என்பதும் தெரியவந்தது. நண்பர் ஒருவரைச் சந்திக்க கன்னங்குறிச்சி சென்ற சக்திவேல் வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி