தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

சேலம்: மதுபோதையில் காரில் வந்தவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் அதிலிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி
விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி

By

Published : Feb 5, 2020, 2:56 PM IST

சேலம் அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவில் ஹரி - தவமணி தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த இரண்டாம் தேதியன்று அவர் தனது குடும்பத்துடன் இரண்டு இருசக்கர வாகனங்களில் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடுதிரும்பினார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கமலக்கண்ணன், சுதர்சனன் ஆகியோர் மதுபோதையில், தங்களது காரை இயக்கி ஹரி குடும்பத்தினர் மீது மோதினர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹரி, அவரது குழந்தைகள் பிரகாஷ், விஷ்ணு, பிரகவ் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவரது மனைவிக்கு கால் நசுங்கியதால் 16 தையல்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் சி.சி.டி.வி காணொலியானது தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:லாரியின் மீது கார் மோதிய விபத்து - 12 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details