சேலம்:மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தில், இரண்டு இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு அங்கிருந்து தப்பியது.
பைக் மீது கார் மோதி விபத்து
இந்த காட்சிகள், இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த மற்றொரு காரிலுள்ள கேமராவில் பதிவானது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், அஜித் என்பது தெரியவந்தது. இருவரும், பழனி சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.