தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு விற்பனை கடை உரிமம் பெற அழைப்பு - பட்டாசு விற்பனை கடைகள் உரிமம்

சேலம்: தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதை அடுத்து சேலம் மாநகரில் பட்டாசு கடை வைக்க உரிமம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பட்டாசு விற்பனை கடைகள்
பட்டாசு விற்பனை கடைகள்

By

Published : Sep 24, 2020, 10:01 AM IST

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் ஏற்பாடுகள் மிக குறைந்த அளவே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் பெற விரும்புபவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி மாலைக்குள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " உரிமை கட்டணம் ரூபாய் 500 கருவூலத்தில் அல்லது வங்கியில் செலுத்தியதற்கான சலான், பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 5 நகல்கள், அந்த இடம் சொந்த கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மட்டும் போதும்.

வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீதுடன் கட்டட உரிமையாளரின் சம்மதமும் ரூபாய் 20 மதிப்புள்ள முத்திரைத் தாளில் சாட்சி கையொப்பம் தேவை.

மாநகராட்சிக்கு உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, 3 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் வேண்டும்.

தற்காலிக பட்டாசு கடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். இடம், உரிமம் கூறும் இடத்தின் பரப்பளவு குறைந்தது ஒன்பது சதுர மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஒரு பட்டாசு கடைக்கும் மற்றொரு பட்டாசு கடைக்கும் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை உள்ள கட்டடத்திற்கும் குறைந்தபட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

திருமண மண்டபங்களிலோ அல்லது வணிக வளாகங்களிலோ பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்க இயலாது "என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கைகளைக் கிருமி நாசினி மருந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details