சேலம் கோட்டை அருகில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் 14ஆவது நாளாக இன்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் நேரில் ஆதரவு தெரிவித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராகத் தற்போதைய ஆட்சி நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அமித் ஷா கொலைக் குற்றவாளி என்று கூறிய விவகாரத்தில் நீதிபதி காணாமல் போயுள்ளார். அந்த வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி மாற்றம் செய்யப்படுகிறார்.