தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்! - மாவட்ட ஆட்சியர் ரோகிணி
சேலம்: ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்து நின்றபடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்த பேருந்துகள்!
இந்நிலையில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் மைதானத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏப்ரல் 18 என்ற வடிவில் அணிவகுத்து நின்றபடி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தொடங்கி வைத்து, தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.