சேலம்:வட தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (நவ.4) இரவு, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்து வெளியேறிய வெள்ள நீர் முழுவதும் குடியிருப்புக்குள் புகுந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீர் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. அப்போது வீடுகளுக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்
இதில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த உணவு, உடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. உடைமைகள் நாசமானது. மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவற்றை அருகில் உள்ள கிராமங்களில் நீர் வழி செல்லும் பகுதிகளில் தேடி வருகின்றனர்.
இது குறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “இங்கு உள்ள ஏரியின் உடைப்பை அலுவலர்கள் சரி செய்தாலே, இது போன்ற பெரும் சேதம் தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இதுபோன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது.