தமிழ்நாடு

tamil nadu

300 கிலோ அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல்!

By

Published : May 7, 2020, 2:12 PM IST

சேலம்: கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து விற்பனை செய்து வந்ததையறிந்து மில்லில் இருந்த ஆயிரம் கிலோ அரைத்த மாவு மற்றும் 300 கிலோ அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் கள்ள சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து விற்பனை செய்து வந்தது அம்பலம்
சேலத்தில் கள்ள சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து விற்பனை செய்து வந்தது அம்பலம்

கரோனா வைரஸ் பரவாமலிருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 42 நாட்களாக நடைமுறையில் உள்ளது. கரோனா நிவாரணமாக நியாயவிலை கடைகளில் தமிழக அரசு சார்பில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள செங்கல் அணைப்பகுதியில் அழகேசன் என்பவர் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் வாங்கி அரைத்து மாவாக்கி சேலத்தில் உள்ள அப்பள கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தனி வட்டாட்சியர் அழகிரிசாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.

300 கிலோ அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல்

இந்த அரிசி அரைக்கும் மில்லில் 300 கிலோ அரிசி மற்றும் ஒரு டன் அளவிலான அரைத்த மாவு பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதையடுத்து உரிமையாளர் அழகேசன் தலைமறைவாகியுள்ளார். அரிசி அரைக்கும் மில்லில் பணியாற்றி வந்த சந்திரசேகரன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்தியவர் ஆலைக்கு சீல்!இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details