சேலம்:சேலம் மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் இன்று (ஜன.24) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் ரிக் லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இந்த போராட்டம் குறித்து அகில இந்திய ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சேது கூறுகையில், " சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரிக் லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.