சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்களில் வெடிகுண்டு சோதனை! - independence alert
சேலம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேலத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதையடுத்து, சேலத்தில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.