தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம்!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனை குருதி வங்கிக்கு தேவையான சிறப்பு குருதிக் கொடை முகாம் இன்று நடைபெற்றது .

சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம்
சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம்

By

Published : Apr 30, 2020, 3:20 PM IST

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குருதி வங்கியில், 500 யூனிட்வரை குருதி வகைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் .

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் ஊரடங்கு உத்தரவால் அரசு மருத்துவமனையால் குருதி சேகரிக்கப்பட முடியாமல் இருந்தது. இதனால் பல்வேறு முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை.

சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம்
இதனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் இன்று குமாரசாமிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறப்பு குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இதில் சேலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திரளாக கலந்துகொண்டு தங்களது குருதியை தானமாக வழங்கினர்.
மேலும் குருதி தானம் வழங்கிய இளைஞர்களை, மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு அவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
கரோனா வைரஸானது சமூக பரவலாக மாறிவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நிலையிலும், குமாரசாமிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குருதிக் கொடையாளர்கள் தினந்தோறும் நடைபெறும். மேலும் இம்முகாமில் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கலாம் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details