சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர், சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில்களில், நாப்தலின் உருண்டை, செல் போன் கவர், ஐடி கார்டு கவர், ரேஷன் கார்டு கவர், தின்பண்ட பாக்கெட்டுகள், தைல பாட்டில்கள் உள்ளிட்டவற்றை, சக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து ரயில் பயணிகளிடையே விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
கடந்த 7 மாதங்களாக சென்னை மின்சார ரயில்கள் கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடன் சொந்த ஊர் திரும்பிய சந்திரசேகர், கிராமப்பகுதிகளில் கால்நடையாக நடந்து தைல பாட்டில்கள் வியாபாரம் செய்து சொற்ப வருமானத்தை ஈட்டி வருகிறார்.
இது குறித்து சந்திரசேகர் பேசுகையில், "சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி நண்பர்களுடன் இணைந்து பயணிகளுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தேன். கரோனா வைரஸால் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வாடகைக் கொடுத்து வசிக்க முடியாமல் குடும்பத்தோடு மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டேன்.