சேலம்:தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா சிலைக்குக் கடந்த 11ஆம் தேதி மாலை அணிவிக்க பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் சென்றார். அப்பொழுது மணிமண்டபம் பூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிலையில், நினைவு மண்டபம் மேலாளர் அளித்தப்புகாரின் பேரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம், பாஜக தர்மபுரி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள கே.பி. ராமலிங்கம் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரை மருத்துவப் பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபொழுது தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பென்னாகரம் மேஜிஸ்திரேட் பிரவீனா சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த திங்கட்கிழமை வந்தார்.