சேலம்: கோவை தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஷ் (22) நேற்று (செப்.12) நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்றுள்ளார்.
அப்போது சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக கார் வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் சிறிது தூரத்துக்கு பாலத்தின் மேலேயே கார் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது.
வானதி சீனிவாசன் மகன் கார் விபத்து காயம் இன்றி உயிர் தப்பினார்
தகவலறிந்த வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஆதர்ஷை மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி ஆதர்ஷ் உயிர் தப்பினார். காரில் ' ஏர் பேக்' இருந்ததால் அவருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகனுடன் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பின்னர் விபத்துக்குள்ளாகிய காரை சாலையிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் பாஜக நிர்வாகிகள் ஆதர்ஷை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?