தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மீதான அதிருப்திதான் அதிமுக வெற்றிக்கு காரணம்! - DMK lost in By-election

சேலம்: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதற்கு, திமுக மீதான பொதுமக்களின் அதிருப்தியே காரணம் என பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 24, 2019, 9:32 PM IST

சேலம் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் பாதயாத்திரையில் பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அரசியல் சூழல் வேறு. அரசியல் சார்பில்லா ஒரு சில பேர் தவறுதலாக பரப்புரை மேற்கொண்டதால் அந்த தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.

இல.கணேசன் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா முழுவதும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மாற்றி வாக்களித்துவிட்டோம் என்ற மனநிலை மக்கள் மனதில் இருந்த காரணத்தினால்தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, மோடி மாமல்லபுரம் வந்தது, திமுக மீதுள்ள அதிருப்தி ஆகிய காரணங்களால்தான் மக்கள் அதிமுகவை அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மேலும் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தைக் கேட்டது குற்றமா? மாணவனை தாக்கிய திமுக வட்டச் செயலாளர்!

ABOUT THE AUTHOR

...view details