பாரதிய ஜனதா கட்சி சேலம் மேற்கு மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று(பிப்.5) மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மேச்சேரி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மீது புகார் மனு அளித்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 2020 - 2021ஆம் ஆண்டிற்கான ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் ஊராட்சிகளில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 1 கோடியே 65 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், மேச்சேரி ஒன்றிய அலுவலகத்தில் இன்று(பிப்.5) ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி அனைத்து வேலைகளுக்கும் முறைகேடான முறையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
அதிமுக ஊராட்சிமன்றத் தலைவர் மீது பாஜகவினர் ஊழல் புகார்! - அதிமுக ஊராட்சி தலைவர் மீது பாஜகவினர் ஊழல் புகார்
சேலம்: அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது பாஜகவின் மேச்சேரி வட்டார பிரமுகர்கள், ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு கவுன்சிலர்களுக்கும் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பிரித்து வழங்கியுள்ளனர். முறைப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமற்றவையாகிவிடும்.இதனை கருத்தில் கொண்டு இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் முறைகேடாக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து முறையான டெண்டரை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டுமென புகார் மனு வழங்கியுள்ளோம் என்றார்.
கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர் அதிமுக பிரமுகர் மீது ஊழல் புகார் வழங்கிய சம்பவம் சேலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.