சேலம் மாநகர் அன்னதானபட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டிப் பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலையில் அதிகளவில் பெண்கள், முதியோர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அப்படி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் ஒரு கும்பல் நகைப்பறிப்பில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதி போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதற்கிடையில் செப்.18ஆம் தேதி, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கமலா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தனது 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட பகுதிகளின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சந்தேகத்திற்கிடமாக இருவர் சீலநாயக்கன்பட்டியிலிருந்து திருச்செங்கோடு, மோகனூர் வழியாக திருச்சி சென்றதுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் குறித்த விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த குமார், மகேஸ்வரன் இருவரும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் அவர்கள் தான் சேலத்தில் நகைப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது அவர்கள் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பெண்ணிடம் நகை பறிப்பு; ஆம்புலன்ஸ் உதவியாளரை தாக்கிய பொதுமக்கள்!