சேலம்:மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி, மிதிவண்டி பயணத்தை தொடங்கிய மலையேற்ற வீராங்கனை ஆசா மால்வியா(24), 100 நாட்களில், 7,300 கிலோமீட்டரை கடந்து நேற்று (ஜன.9) சேலம் வந்தடைந்தார். அவரை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார்.
அதன்பின் சேலத்தில் இருந்து புறப்பட்ட ஆஷா மால்வியா, தர்மபுரி செல்கிறார். தொடர்ந்து தர்மபுரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஹைதராபாத் செல்ல உள்ளார். இதுகுறித்து ஆஷா மால்வியா கூறுகையில், “நவ.1ஆம் தேதி போபாலில் மிதிவண்டி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினேன்.
இதுவரை மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 7 மாநிலங்களைக் கடந்துள்ளேன். 100 நாட்களில் 7,300 கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன். 252 நாட்களில் 25,000 கிலோமீட்டர் பயணித்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை விளக்கும் வகையில் எனது பயணம் அமைந்துள்ளது.