தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறைக்காற்றால் சாய்ந்த ஆலமரம்: எருமை சாவு, 4 வீடுகள் கடும் சேதம்! - சேலத்தில் ஆலமரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம்

சேலம்: ஓமலூர் அருகே ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் நான்கு வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சூறைக் காற்றால் சாய்ந்த ஆலமரம்: சேதமடைந்த வீடுகள்
சூறைக் காற்றால் சாய்ந்த ஆலமரம்: சேதமடைந்த வீடுகள்

By

Published : May 30, 2020, 10:18 AM IST

சேலம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் திடீரென நேற்றிரவு ஓமலூரில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இந்தச் சூறைதக்காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வேருடன் சாய்ந்த ஆலமரம்

இதில் ஓமலூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமும், அரசமரமும் வேரோடு சாய்ந்தன. இதனால் சேட்டு, சிவசங்கரி, கார்த்திக், லட்சுமி ஆகியோரது வீடுகள் பலத்த சேதமடைந்தன.

சேதமடைந்த வீடுகள்

வீட்டினுள் சிக்கியவர்கள் வெளியே வர இயலாமல் அலறியடித்தனர். பின்னர், அவர்களைப் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், ஆலமரத்தடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு எருமை மாடு உயிரிழந்தது.

மரம் விழுந்ததில் உயிரிழந்த மாடு

சேதமடைந்த பகுதிகளை மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளர் செல்லதுரை பார்வையிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி காலை உணவுகளை வழங்கினார்.

மேலும், வேரோடு சாய்ந்த ஆலமரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை தாக்கியதில் வீடுகள் சேதம்... எம்.எல்.ஏ. ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details