தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி ஊழியர்களின் போராட்டம்: பணப் பரிவர்த்தனை முடக்கம்

சேலம்: வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடரும் வங்கி ஊழியர்களின் போராட்டம்: 1000 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை முடங்கியது!
தொடரும் வங்கி ஊழியர்களின் போராட்டம்: 1000 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை முடங்கியது!

By

Published : Feb 1, 2020, 2:40 PM IST

வங்கி ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

இதையொட்டி சேலம் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள எஸ்பிஐ, வங்கி வளாகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடரும் வங்கி ஊழியர்களின் போராட்டம்

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், சேலத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்றும், இன்றும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சேலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து வங்கிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனவே வங்கி ஊழியர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமவதற்கு முன்பாக, மத்திய அரசு தங்களது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்- மக்கள் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details