தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும்' - விக்கிரமராஜா - Ban 2000 rs Note

சேலம்: கள்ள நோட்டுப் புழக்கத்தை தடுத்து நிறுத்த 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Vikkirama Raja
Vikkirama Raja

By

Published : Dec 6, 2019, 12:07 AM IST

சேலத்தில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாவட்ட வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விக்கிரமராஜா, " தமிழ்நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிசம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தற்போது வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் அளவுக்கு விற்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெங்காயத்தின் இந்த விலை ஏற்றத்திற்கு அரசுகள் தான் காரணம். உள்நாட்டில் வெங்காயத்தின் தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை அரசு அலுவலர்கள் வைத்திருக்க வேண்டும். அதன்படி வெங்காயத்தை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் அலுவலர்களிடம் அதுபோன்று புள்ளிவிவரங்கள் இல்லாததாலும் வெங்காயத்தை சேமித்து வைக்க மிகப்பெரிய அளவில் கிடங்குகள் இல்லாததினால், இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது .

செய்தியாளர் சந்திப்பு
இதைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ள நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால் தான் பிரதமர் பழைய ரூபாய் நோட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்து, புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தார். ஆனால், தற்போது 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது . எனவே மத்திய அரசு 2000 ரூபாய் கள்ள நோட்டைத் தடுக்க 2000 ரூபாய் நோட்டையே தடைசெய்யவேண்டும். கள்ள நோட்டு அச்சடிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடரப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details