தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டி வசூல் வேட்டையில் பஜாஜ் நிதி நிறுவனம்: ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் - சேலம் செய்திகள்

சேலம்: வாடிக்கையாளர்களிடம் பல மடங்கு அபராதம் விதித்து வட்டி வசூலில் ஈடுபட்டுவரும் பஜாஜ் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பஜாஜ்
பஜாஜ்

By

Published : Jun 4, 2020, 2:56 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், வேலையின்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். தனியார், அரசு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதாந்திர தவணைத் தொகை செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் ஆறு மாதங்கள் நீட்டிப்பு வழங்கின.

மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க நிர்பந்திக்கக் கூடாது என்றும் இது தொடர்பாக எந்தவித அபராத கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் பல்வேறு வங்கி நிறுவனங்கள் மத்திய அரசுகளின் கோரிக்கைகளைப் பின்பற்றிவருகின்றன.

ஆனால் சில தனியார் நிறுவனங்கள் மட்டும் மாதாந்திர தவணைத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்கி வருகின்றார்கள். அந்த வகையில் சேலத்தில் இயங்கிவரும் பஜாஜ், எல்என்டி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து முன்னரே பெறப்பட்ட வங்கி காசோலைக்கு அபராத தொகையை பல மடங்கு வசூல் செய்தது தெரியவந்துள்ளது .

கடன் பெற்ற நபர் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்தே வங்கிகளில் காசோலையை டெபாசிட் செய்து அதற்கான தொகை இல்லாதபோது அதற்கு கட்டணமாக அபராத தொகை வசூல் செய்யும் புதிய நடவடிக்கைகளை பஜாஜ் நிதி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது . ஒரே காசோலையை பலமுறை டெபாசிட் செய்து அதற்கான அபராத தொகையை பலமடங்கு வசூலிப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், நேற்று (ஜூன் 3) சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். வங்கி காசோலைக்கான அபராத கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது .

இதனால் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தினர்.

அதன்பின், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details