தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு மாத குழந்தை ரூ. மூன்று லட்சத்திற்கு விற்பனை - சேலத்தில் அவலம்! - சேலம்

சேலம்: இளம் தம்பதியின் நான்கு மாத குழந்தையை மூன்று லட்ச ரூபாய்க்கு பெண்ணின் பெற்றோர்களே விற்பனை செய்துவிட்டதால் ,குழந்தையை மீட்டு தரக்கோரி தம்பதியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

baby_sale

By

Published : Nov 18, 2019, 3:25 PM IST

சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் மீனா ஆகிய இளம் தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில், மீனாவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் மீனா உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை, மீனாவின் பெற்றோரான சாந்தி மற்றும் பொன்னுசாமியிடம் ஒப்படைத்து பராமரிக்க கூறியுள்ளனர். குழந்தையைப் பராமரித்த மீனாவின் பெற்றோர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையை மூன்று லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மீனாவிற்கு உடல்நலம் சரியானவுடன் பெற்றோரிடம் தம்பதியினர் குழந்தையைக் கேட்டபோது குழந்தை இல்லை எனவும் குழந்தையை வேறொருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இளம் தம்பதியினர் குழந்தையை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு மாத குழந்தை ரூ. மூன்று லட்சத்திற்கு விற்பனை

மேலும், இன்று குழந்தையின் பெற்றோரான ராஜா மற்றும் மீனாவும் குழந்தையை மீட்டு தரக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

’பாரபட்சமின்றி சேலத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை மாவட்டமாக்க வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details