தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் சிறப்பு! - தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகை

சேலம்: ஆயுதபூஜை பண்டிகை நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சேலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/08-October-2019/4684377_790_4684377_1570480026310.png

By

Published : Oct 8, 2019, 7:47 AM IST

தமிழ்நாட்டில் ஆயுதபூஜை பண்டிகை நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு சேலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சிறை முனியப்பன் சாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இங்கு திரளான பொதுமக்கள் தங்களது வாகனங்களைக் கொண்டுவந்து பூஜை செய்து எடுத்துச் சென்றனர். இதுபோல சேலம் ஐந்து திருமாளிகை பகுதியில் உள்ள பூட்டு முனியப்பன் சாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆயுதபூஜை பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிய சேலம்வாசிகள்

மேலும், குரங்கு சாவடியில் உள்ள வெண்ணங்குடி முனியப்பன் சாமி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கு திரளானோர் வாகனங்களை எடுத்துவந்து பூஜை செய்து எடுத்துச் சென்றனர். இதுதவிர மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்கள் தாங்கள் விளையாடும் கருவிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலம்பாட்ட வீரர்களும் தங்களின் விளையாட்டுக் கருவிகளை வைத்து வணங்கினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details