ரயில்வேத் துறை சார்பில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்தும் ரயில் வழித்தடங்களில் கடக்காமல் மேம்பாலங்களை பயன்படுத்தி ரயில் வழித்தடங்களை கடப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! - train journey
சேலம்: டவுன் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழச்சியில் பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
![ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3118486-thumbnail-3x2-train.jpg)
இதனை சேலம் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி பெருமாள் கலந்துகொண்டு பயணிகளின் பாதுகாப்பு குறித்து எடுத்து கூறினார். மேலும், ரயிலில் பயணிக்கின்ற பொழுது ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், கொள்ளையர்களின் அட்டகாசம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை 182 என்ற ரயில்வே இலவச டோல் ஃப்ரீ எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களின் பிரச்னைகளை கூறலாம் என்றும்
இது தொடர்பாக அந்த ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் பத்து நிமிடங்களில் விரைந்து வந்து ரயில் பணிக்கு உதவுவார்கள் எனவும் கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில் நிலையத்திலிருந்த பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.