தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் அதிகாரியைக் கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநர் கைது!

சேலம்: குடிபோதையில் பெண் அதிகாரியை சரமாரியாகத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரியை சரமாரியாகத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

By

Published : Nov 7, 2019, 10:54 PM IST

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கூணான்டியூர் அடுத்த குட்டைமேடு பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுடன் சேர்ந்து மாவட்ட திட்ட உதவி அலுவலர் சுசீலா ராணி டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த போதை ஆசாமி, பிரபாகரன் என்பவர், பள்ளி மாணவர்களை வைத்து ஏன் விழிப்புணர்வு செய்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு செய்ய தமிழ்நாடு அரசு அளித்த உத்தரவின் பேரில் தான், பணி நடைபெறுகிறது என பொறுமையாகப் பதில் கூறியுள்ளார்.

ஆனால், பதிலை ஏற்றுக்கொள்ளாத பிரபாகரன் மாணவர்களை வைத்து விழிப்புணர்வு செய்யக்கூடாது என்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது வாக்கு வாதம் முற்றி மாவட்ட திட்ட உதவி அலுவலரைப் பிரபாகரன் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுசீலா ராணி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பெண் அதிகாரியை சரமாரியாகத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் சுசீலா ராணி கொடுத்தப் புகாரின் பேரில் , மேச்சேரி காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் மீது அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், என்னை வாகனத்தைக் கொண்டு ஏற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தெலங்கானா வட்டாட்சியர் விஜயாவை எரித்த கொலையாளி மருத்துவமனையில் உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details