சேலம் மாவட்டம் தலைவாசல் புத்தூர் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் பகுதிக்கு உறவினரின் ஈமச் சடங்கிற்காக சென்றுள்ளனர். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்சென்ற இந்த மினி ஆட்டோ ஊனத்தூர் ஏரி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு - சேலம் விபத்து செய்திகள்
சேலம்: தலைவாசல் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
accident
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஆரணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் சென்ற 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் படுகாயமடைந்த 10 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.