சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் இன்று (நவ.10) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்தனர். அப்பொழுது சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய பிரதிநிதி கோவிந்தன் என்பவரது மகன் கடந்த 2001 ஆம் ஆண்டு தாசநாயக்கன்பட்டி பகுதியில் போலீசார் தவறுதலாக சுடப்பட்டதில் மகன் சண்முகம் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தொடர்ந்து அதற்கு நிவாரணமும் தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி பலமுறை அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனு வழங்கியுள்ளார்.
அந்த மனு குறித்து, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த கோவிந்தன் அமைச்சகளிடம் இதுகுறித்து கோரிக்கை வைப்பதற்காக சென்றார். அப்போது, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அவரை தடுத்து நிறுத்திய நிலையில், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் குறையைக் கூற வந்த, திமுக பிரமுகரின் வாயைப் பொத்தியபடி தரத்தரவென வெளியே கொண்டு செல்லப்பட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
குறையை முறையிட போன திமுக நிர்வாகியை திமுகவினரே வெளியேற்றியதால் சலசலப்பு இதனை அடுத்து அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் வெளியேற்றப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'திமுகவின் தவறை கண்டுபிடிப்பதால் அச்சம்' - ஆளுநர் விவகாரத்தில் வானதி சீனிவாசன் விளாசல்!