சேலம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித் என்பவர், பழனியிலிருந்து அவரது நண்பர் அருணுடன் நேற்று முன்தினம் (ஜூலை. 25) இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கார் மோதி விபத்து
அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி அருகில் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சி
இந்த விபத்து குறித்த காணொலி பின்னால் வந்த கார் ஒன்றில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் சமூக வலைதளங்களில் வைரலான காணொலியை கொண்டு மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் விசாரணை
அதில் விபத்தை ஏற்படுத்திய கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது. காரில் 4 பேர் பயணித்த நிலையில் சதீஷ்குமார் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.