தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தவறான வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' - அர்ஜூன் சம்பத்

சேலம்: "தேர்தலில் மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுப்பவர்களை கண்காணித்து, அவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அர்ஜுன் சம்பத்

By

Published : Mar 30, 2019, 9:28 PM IST

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,

தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளிடமும், திருமணத்திற்காக பணத்தை எடுத்து செல்பவர்கள் இடமும் திமுக தூண்டுதலின் பேரில்தான் பறிமுதல் செய்கின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஊழியர்கள், நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றி வந்தால் அவர்களை கண்டறிந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

நரேந்திர மோடி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் குறித்து அவதூறு பரப்பி வெறுப்பு பரப்புரை செய்து வருவது கண்டிக்கத்தக்கது. திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

அதிமுகவும் பணம் வழங்குவதை தமிழ் நாளிதழ்களில் போட்டோவுடன் வந்துள்ளது.ஓட்டுக்காக யார் பணம் கொடுத்தாலும் தவறுதான். அதிமுகவின் நிறைய கூட்டங்களில் திமுகவினர் ஊடுருவுகின்றனர். பணம் கொடுப்பதுபோல் ஒரு போலியான தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சி செய்கிறது. இது திமுகவிற்கு கைவந்த கலை.

திமுகவின் பொய்யான பரப்புரை அநாகரிகமாக பேசுவது உள்ளிட்டவைகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தேர்தலில் மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுப்பவர்களை கண்காணித்து அவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். திமுக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்திருப்பது தவறானது, என்றார்.

ABOUT THE AUTHOR

...view details