சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பிரிவில் உள்ள முதலாமாண்டிற்கான 5,600 காலியிடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகள்! - goverment arts college
சேலம்: அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்றனர்.
அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகள்!
இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு சென்று விண்ணப்ப படிவங்களைப் பெற்று வருகின்றனர். இதுவரை அக்கல்லூரியில் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.