தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை!

சேலம்: மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை!
மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை!

By

Published : Dec 6, 2020, 10:34 AM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைக் கண்காணித்துவந்தனர்.

இந்நிலையில், நேற்று (டிச. 06) பிற்பகல், திடீரென சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்தனர். அங்கிருந்த தரகர்களை சுற்றிவளைத்து ஓரிடத்தில் அமரவைத்தனர். அப்போது, அங்கு சிதறிக்கிடந்த 22 ஆயிரத்து 700 ரூபாயை காவல் துறையினர் கைப்பற்றினர்.

மேலும், அலுவலக கோப்புகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணத்தையும் பறிமுதல்செய்தனர். மொத்தம் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாய் கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றினர். அலுவலகத்திற்கு வெளியே இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன், போக்குவரத்து ஆய்வாளர் முரளி ஆகியோரை உள்ளே அழைத்து விசாரணை நடத்தினர்.

பணம் தொடர்பாக அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பிடிபட்ட இடைத்தரகர்களில் சதீஷ் என்பவர் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர். இவர், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளியின் உறவினர் ஆவார். ஓமலூரைச் சேர்ந்த சரவணன் என்பவரும் பிடிபட்டுள்ளார்.

இதையும் படிங்க...அலட்சியத்தால் நேர்ந்த விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details