தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Co-operative loans: கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு - விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

Co-operative loans:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழ்நாடு முதலமைச்சரைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

Announcement of farmers struggle demanding waiver of cooperative loans
Announcement of farmers struggle demanding waiver of cooperative loans

By

Published : Dec 13, 2021, 10:58 PM IST

சேலம்:(Announcement of farmers struggle demanding waiver of Co-operative loans): விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை, தற்போது வரை நிறைவேற்றவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறுகையில்,

"கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.

அதன் பெயரில் அரசாணையும் வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யப்பட்டது.

குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யாமல், விதிமீறல் இருப்பதாகக் கூறி கடனை, மீண்டும் திரும்பிச்செலுத்தும் படி வங்கி அலுவலர்கள் விவசாயிகளை நெருக்கடி செய்து, புதிய கடன்களையும் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர் .

கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
எனவே, விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி டிசம்பர் 18ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் சுழற்சிமுறை ரத்து'

ABOUT THE AUTHOR

...view details