தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - salem district news

சேலம்: பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 23, 2020, 3:07 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டெய்சி தலைமையில் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் டெய்சி பேசுகையில்," எங்களின் நீண்ட கால நிலுவையில் உள்ள 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரசு ஒத்துக்கொண்டது.

ஆனால் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே உடனடியாக அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் மேலும் போராட்டங்களை தீவிரமாக நடத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க: நச்சு கழிவுகளால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் இழப்பீடு கோரி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details