தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் 'காட்மேன்' தொடரை தடை செய்க' - அந்தணர் முன்னேற்ற கழகம் - காட்மேன்

சேலம்: பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட 'காட்மேன்' இணையத் தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

AMk
AMk

By

Published : May 30, 2020, 10:31 AM IST

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது 'காட்மேன்' இணையத் தொடர். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஜூன் 12ஆம் தேதி ஒளிபரப்பவிருக்கும் இந்த இணையத் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில், பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக டீஸர் வெளியானதில் இருந்து பலர் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், பிராமணர்களையும் இந்து மதத்தையும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் 'காட் மேன்' திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "காட்மேன் என்ற இணையத்தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில், பிராமணர்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும், அவதூறான கருத்துக்களும், கொச்சையான காட்சிப்படுத்துதல்களும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எனவே, இதன் இயக்குநர் பாபு யோகேஷ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, தயாரிப்பு நிறுவனமான ZEE 5வின் நிர்வாக இயக்குநர், நடிகர்கள், உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்ச்சையை ஏற்படுத்திய 'காட்மேன்' டீசர்!

ABOUT THE AUTHOR

...view details