தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அமமுகவினர் - AMMK party members distribute groceries to the downtrodden at Salem

சேலம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்

By

Published : May 8, 2020, 12:42 PM IST

தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வேலை, வருமானமற்று ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சேலம் மத்திய மாவட்ட அமமுக சார்பில், நெத்திமேடு பகுதியில் உள்ள ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை , காய்கறி உள்ளிட்ட பொருட்களை கழக அமைப்புச் செயலாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான வீரபாண்டி எஸ். கே. செல்வம், மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மளிகைப் பொருட்கள் தொகுப்பு

இதில் பொது மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து முகக் கவசம் அணிந்து தங்களுக்கான பொருட்களை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து சேலம் 49ஆவது பிரிவுக்கு உட்பட்ட கே. பி. கரடு பகுதியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, வீடுவீடாய் சென்று அரிசி , கோதுமை , காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுருளி வேல் உள்ளிட்ட பகுதி செயலாளர்களும், திரளான மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :ஊரடங்கால் வெறிச்சோடிய நட்சத்திர விடுதிகள்

ABOUT THE AUTHOR

...view details