தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் முன்னிலையில் மாற்றுக் காட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்! - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

Admk party
அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

By

Published : Jul 20, 2020, 1:25 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாமப்பா, எம்.மகேஷ், கீதா சித்துராஜ் ஆகியோரும், பைனாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ஆர். சதீஷ், ஆசனூர் ஊராட்சிமன்ற தலைவர் எஸ். சித்ரா சுப்பிரமணியம் ஆகியோரும், அமமுக-வைச் சேர்ந்த தாளவாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர். சுப்பிரமணியம், செயலாளர் சி. பிரகாஷ், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் எஸ். பாபு, தொழில்நுட்பப் பிரிவு எஸ். சிவா, நெய்தாளபுரம் ஊராட்சி கழகச் செயலாளர் ஜி.சித்துராஜ், தலமலை ஊராட்சி கழகச் செயலாளர் கே.வினை (எ) பிரசாத் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோல், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்த திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.பி. வெங்கிடுசாமி, மதிமுக சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். நடராஜ், அமமுக சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் வி.எம். மூர்த்தி, அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் சுஜித் (எ) சுநாயுல்லா, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர். சுப்பிரமணியன், திமுக ஒன்றிய பிரதிநிதி எம்.சக்திவேல் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

மேலும், பவானி, அம்மாபேட்டை ஒன்றிய திமுக வர்த்தக அணி ஒன்றியச் செயலாளர் பாலுசாமி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சிமன்றத் தலைவர் என்.மரகதம், கேசரிமங்கலம் ஊராட்சிமன்றத் துணைதலைவர் பி.ஜெயந்தி தனபால் ஆகியோரும், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், மூங்கில்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் (காங்கிரஸ்) கே.எம். விஸ்வநாதன், டி.என். பாளையம் ஊராட்சி ஒன்றியம், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் சேகர், அ.ம.மு.க-வைச் சேர்ந்த கணக்கம்பாளையம் ஊராட்சி கழக செயலாளர் கே. பூபதி, நஞ்சை புளியம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் வி. மோகன்ராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details