சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில் அவசர அவசரமாக மூன்று சட்டமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நிலைக்கு சபாநாயகர் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணமாகும்.
தேர்தல் முடிவுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும்- புகழேந்தி தகவல்
சேலம்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் காணாமல் போகும் என கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி
அதே வேளையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நோட்டீஸ் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பல கட்சிகள் காணாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.