சேலம்: அமமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன் ராஜா, சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகிய மூன்று பேரும் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்