சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில், அமமுக சார்பில் செல்லமுத்து போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்குவதையடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் செல்லமுத்து ஈடுபட்டு வருகிறார்.
சாக்கடைத் தூர்வாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்! - அமமுக வேட்பாளர் செல்லமுத்து
சேலம்: சங்ககிரி தொகுதி அமமுக கூட்டணி வேட்பாளர் செல்லமுத்து சாக்கடைத் தூர்வாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ammk
இந்நிலையில், தாரமங்கலம் பகுதியில் செல்லமுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அண்ணா சிலை அருகே உள்ள தேநீர் கடையில், தேநீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு உள்ள சந்தைகளில் சென்று கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்து பரப்புரையில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்
மேலும் பல மாதங்களாக சாக்கடைத் தூய்மை செய்யாமல் இருந்ததை அறிந்து செல்லமுத்து தூய்மைப்படுத்தி பரப்புரை செய்தார்.