தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 30, 2019, 11:02 AM IST

ETV Bharat / state

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - புகழேந்தி வழக்கு!

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சேலத்தில் தெரிவித்துள்ளார்.

ammk party pugalendhi  அமமுக பெங்களூர் புகழேந்தி  அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல்  சேலம் மாவட்டச் செய்திகள்  டிடிவி தினகரன்  ammk bangalore pugalendhi filed case  ttv dinakaran டிடிவி தினகரன்
அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - பெங்களூர் புகழேந்தி வழக்கு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, "டிடிவி தினகரன் ஒரு மோசடிப் பேர்வழி. கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சேலத்தில் இருந்து மட்டும் 200கோடி ரூபாய் கடந்த மக்களவைத் தேர்தலின் போது அமமுகவிற்கு கைமாறி உள்ளது.

அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று டிடிவி தினகரன் கூற வேண்டும். இல்லையென்றால் அது தொடர்பான முக்கிய ஆவணங்களை நான் வெளியிடுவேன். மக்களவைத் தேர்தலின் போது, கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய ஆடிட்டரிடம் கூட ஐந்து கோடி ரூபாயை தினகரன் கேட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தற்பொழுது ஆர்கே நகர் தொகுதியில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்றால் பத்தாயிரம் வாக்குகள் கூட வாங்க மாட்டார்.

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - பெங்களூர் புகழேந்தி வழக்கு

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும். மக்கள் அதிமுகவின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர் " என்றார்.

இதையும் படிங்க: ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details