தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுக கூட்டணி சார்பில் ஏற்காடு தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் - ஏற்காடு தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியின் ஏற்காடு வேட்பாளர் அறிமுக கூட்டம் வாழப்பாடியில் நடைபெற்றது.

ammk
ammk

By

Published : Mar 21, 2021, 11:57 AM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள டிடிவி தினகரன் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சேலம் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்டபாளர் கே.சி. குமாரை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் வாழப்பாடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக அமைப்புச் செயலாளரும் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வீரபாண்டி எஸ்.கே. செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

அதனைத் தொடர்ந்து தேமுதிக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தேமுதிக வேட்பாளர் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அதற்காக தேமுதிக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமமுக மற்றும் தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details